லால்குடியில் போலீசாரை கடித்த தல அஜீத் ரசிகர்கள்; கம்பி எண்ண வைத்த போலீசார்!

0 265
Stalin trichy visit

பிரபல நடிகர் தல அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருச்சியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அன்பு தியேட்டரிலும் வலிமை படம் வெளியானது. முதல் காட்சியில் அஜித் தோன்றிய காட்சியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் திரைக்கு அருகில் சென்று துள்ளி குதித்துள்ளனர்.

அப்போது தீ தடுப்பான் மண் வாளியை எடுத்து கொண்டு நடனம் ஆடி உள்ளனர். இது குறித்து தியேட்டர் ஊழியர்கள் லால்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் ரசிகர்களை இருக்கையில் அமர்ந்து படம் பார்க்க அறிவுறுத்தி உள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அஜித் ரசிகர்கள் போலீஸ்காரரை தாக்கி வலது தோள் பட்டையில் கடித்து உள்ளனர். இதில் காயமடைந்த அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லால்குடி போலீசார் புள்ளம்பாடி அருகே கல்லக்குடி அம்பாள் தியேட்டர் பகுதியைச் முத்தரசன் மகன் 25 வயதான அருண்குமார் மற்றும் ரவிக்குமார் மகன் 24 வயதான கோபிநாத் ஆகிய இரு அஜித் ரசிகர்களை கைது செய்தனர். பின்னர் லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.