திருச்சி தேசியக் கல்லூரி1177 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

0 434
Stalin trichy visit

திருச்சி தேசியக் கல்லூரியில் 2019-20 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று தேசியக் கல்லூரி திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் மகேந்திரா பிரைவேட் லிமிடெட் தலைமை இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ராம் பிரவீன் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் தேசிய கல்லூரியின் முதல்வர் சுந்தரராமன் ஆண்டறிக்கை வாசித்து விழாவை தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் 1177 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் 869 இளங்கலையும், 182 முதுகலையும், 126 இளநிலை ஆய்வறிஞர் பட்டமும் என மொத்தம் 19 துறைகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். இதில் 350 மாணவர்கள் இன் ஆப்சென்சியாக ஆக பட்டம் பெற்றுக்கொண்டனர். இளநிலைப் பட்டப் படிப்பில் 18 மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசை தேர்வில் சிறப்பிடம் பெற்றனர். முதுகலை பட்டத்தில் 10 மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசையில் சிறப்பிடம் பிடித்தனர். இளநிலையில் 2017 – 2020ம் கல்வி ஆண்டில் 1200 மாணவர்கள் தேர்வு எழுதி 1079 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதுகலையில் 2018 – 2020 கல்வியாண்டில் 270 மாணவர்கள் தேர்வு எழுதி 113 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 185 மாணவர்கள் கல்லூரி வளாக நேர்முகத்தேர்வில் பலதுறைகளில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.