திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர் ஊராட்சியில் அறிவியல் மன்ற தொடக்க விழா

0 490
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் மன்ற தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மகத்தானது. மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஆண்டவர் கல்லூரி மாணவ,மாணவிகள் இணைந்து அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.இதில் மாணவ, மாணவிகள் அறிவியல் பன்பாட்டைப் பற்றி வரைபடங்கள் வரைந்து கண்காட்சியில் வைத்தனர்.பின்னர் கண்காட்சி பார்வையாளர்களுக்கு மாணவ,மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.இந்நிகழ்வில் ஆண்டவர் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் கர்ணன் சிறப்புரையாற்றினார், முதுகலை ஆசிரியர் வெற்றிச்செழியன் வரவேற்புரையாற்றினார்.பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பள்ளி மாணவ மாணவிகள் ஆண்டவர் கல்லூரி மாணவ மாணவிகள்,பேராசியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை சிறுகாம்பூர் அரசுப் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.