மருங்காபுரி ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா; 3,000 பேர் தீ மிதித்து நேர்த்திக்கடன்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பால்குடவிழா, பூக்குழி இறங்கிதல் வெகுவிமர்ச்சையாக நடப்பது வழக்கம். நிகழாண்டு திருவிழா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி பூச்சொரிதல்,
காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள், இதனை தொடர்ந்து நேற்று காலை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழி இறங்குதல் எனும் தீ மிதித்தல் நிகழ்ச்சி
நடைபெற்றது, இதில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள், பின்னர் கோவிலில் முன்பு ஊர் பொங்கல் நிகழ்ச்சி, முடி எடுத்தல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. மாலையில் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச்சென்றனர். திருவிழாவையொட்டி பலத்த போலீல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.