அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் த.வெ.க.வில் இணைந்தார்

0 12
Stalin trichy visit

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னையில்  தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் தனது மகன் ஜவகர் மற்றும் ஆதரவாளர்களுடன் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது வெல்லமண்டி நடராஜன் சுற்றலாத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக அதிமுகவில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் தமிழக வெற்றிக்கழகம் பக்கம் இழுத்துச் செல்லப்படுவது குதிரை பேர அரசியலுக்கு உதாரணமாக உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.