“அரிசிக்கே பஞ்சம் வரும் நிலை” டிடிவி தினகரன் பேச்சால் தேம்பி, தேம்பி அழுத அய்யாகண்ணு!

0 542
Stalin trichy visit

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திருச்சி மேலசிந்தாமணியில் தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியபோது டி.டி.வி தினகரன் கூறியதாவது:-
தமிழகத்தில் 60% நெற்பயிர்கள் விவசாயம் காவிரி ஆற்றை நம்பியே உள்ளது. கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிராக இங்கு செயல்பட்டு வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை கூட மதிக்காமல் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

செய்துள்ளது கர்நாடக அரசு. நாம் சகோதர சகோதரிகளாக நினைக்கின்றோம். ஆனால் கர்நாடக அரசு நம்மை பாகிஸ்தான் போல் பார்க்கிறது. தமிழகத்தில் உள்ள திமுக அரசு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இதில் முயற்சி எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறேன். திமுக ஆட்சி என்றாலே பயம் தான். 1970ல் கருணாநிதி ஹேமாவதியில் அனை கட்ட எந்த தடையும் இல்லை என்று பச்சை கொடி காட்டினார். பின்னர் 1972லும் இதேபோல் செய்தார். அரிசிக்கே பஞ்சம் வரும் நிலைமை இப்போது

தமிழகத்தில் வந்துள்ளது. வழக்கம் போல் வசனம் பேசி ஏமாற்றமல் திமுக செயல்பட வேண்டும். திராவிட மாடல் ஆட்சியா? அல்லது தில்லு முல்லு ஆட்சியா? என்பது போல் யோசிக்க வைக்கமால செயல்பட வேண்டும். அரசியல் பயணத்திறக்காக இந்த போராட்டம் இல்லை. அமமுக போராட்டத்தில் தோன்றிய கட்சி. எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம். நாங்கள் மக்களுக்காக இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளோம். நாங்கள் ஜனநாயக போராளிகள். தமிழ்நாட்டு பிரச்சினை என்றாலே அப்போது எல்லாம் கோட்டை விட்டு விடும். திராவிட மாடல்

என்று சொல்லும் திமுக அரசு இதிலும் கோட்டை விடால் வருங்கால சங்கதியினர் மன்னிக்க மாட்டார்கள். காடுகள் வளர்ப்பு திட்டம் போன்ற பல திட்டங்களை கொண்டு வர வேண்டும். அனை தேவையான இடத்தை தவிர மற்ற இடத்தில் காடு வளர்க்கும் திட்டத்தை கொண்டு வர வேண்டும். ஏற்கனவே இருந்தது போல் இருந்த விடாமல் தற்போது திமுக முனைப்புடன் செயல்பட வேண்டும். ஊராட்சி முதல் மாநகராட்சி வரை மக்கள் வாக்களித்து விட்டு அச்சத்தில் உள்ளனர். திமுகவினருக்கு தான் இது விடியல் ஆட்சி என மக்கள் உணர்ந்து வருகின்றனர் என்றார். இதில் கலந்து கொண்ட அய்யாகண்ணு தேம்பி தேம்பி அழுதார்.

 

Leave A Reply

Your email address will not be published.