மேகதாது விவகாரம்; டிடிவி தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

0 350
Stalin trichy visit

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திருச்சி மேலசிந்தாமணியில் தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 1000-க்கும் அதிகமான அமமுகவினர்

கலந்து கொண்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவிரி மேகதாதுவில் அனை கட்டும் போக்கை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். திமுக அரசு இதில் முழுமையாக கவனம் செலுத்தி இதனை தடுத்து நிறுத்த

வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாய சங்கங்களின் சார்பில் பி.ஆர்.பாண்டியன், அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.