பளுவஞ்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா!
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, துவரங்குறிச்சி பளுவஞ்சி ஸ்ரீ மீனாட்சி விடியல் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக
துணைவேந்தர் செல்வம் பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். விடியல் கல்விக் குழும நிறுவனர் தேவராஜ் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் ஷெர்லி தேவராஜ் மற்றும் இயக்குனர் சதீஷ் தேவராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி முதல்வர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.