இரவு வரை மக்கள் பணி; அசத்தும் கவுன்சிலர்!
திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் நேற்று இரவு 11.30 மணி வரை ஓந்திகுளம் பகுதி, காந்திஜி சாலை, பர்மா காலனி, கமலா நேரு தெரு,

முருகன் கோயில் தெரு, காட்டூர் மெயின் ரோடு, அண்ணா தெரு, போஸ் தெரு, பாரதியார் தெரு, ராஜவீதி, வ.உ.சி.தெரு ஆகிய பகுதிகளில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்தார். மேலும் அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.