நெட்பால் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்!

0 285
Stalin trichy visit

பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி தஞ்சாவூர் மண்டலத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான நெட்பால் (வலைப் பந்து) போட்டி அரியலூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் நடந்தது. முதல் அரையிறுதி போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி, எம்ஆர்சி கல்லூரி அணியை 30- 1 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இரண்டவது அரையிறுதி போட்டியில் திருச்சி யுடிசி அணி, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி அணியை

40-14 என்ற புள்ளி கணக்கில் வென்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி, யுடிசி கல்லூரி அணியை 25–15 என்ற புள்ளி “கணக்கில் வென்று, முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு மீனாட்சி ராமசாமி கல்லூரி

செயலாளர் ரகுநாதன், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கி பேசினார். சாம்பியன் பட்டம் வென்ற ஜமால் முகமது கல்லூரி வீரர்களை அக்கல்லூரி தாளாளர் காஜா நஜூ முதீன், பொருளாளர் ஜமால் முகமது, உதவி செயலாளர் அப்துல் சமது, இயக்குனர் அப்துல் காதர் நிகால், கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன், உடற்கல்வி இயக்குனர் ஷாயின்ஷா உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.