ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்த வாலிபர்; உடலின் அருகே கிடந்த கடித்ததால் பரபரப்பு!

0 546
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த திருச்சி சாலை ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைந்தது. மேலும் இறந்த வாலிபர் உடலின் அருகே கடிதம் ஒன்றும் கிடப்பதாக தெரியவந்தது. இதையடுத்து திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை

நடத்தியபோது இறந்தவர் மணப்பாறையை அடுத்த சுண்டக்காம்பட்டியைச் சேர்ந்த கோபால் (வயது 23) என்பது தெரியவந்தது. மேலும் இறந்தவரின் அருகில் கிடந்த கடிதத்தில் என் பெயர் கோபால் என்றும், சுண்டக்காம்பட்டியைச் சேர்ந்த ஒரு நபரின் மனைவியின் பெயரை குறிப்பிட்டு அவரை 2018ல் இருந்து தன்னுடைய அனுசரிப்பில் வைத்திருந்த நிலையில் தற்போது அந்தப் பெண் தந்தையின் பேச்சை கேட்டு என்னை வெறுத்து விட்டதாகவும், இதனால் மமுடைந்த நான் தற்கொலை

செய்து கொள்கின்றேன் என்றும் அந்த கடிதத்தில் இருந்தது. மேலும் மனசாட்சி உள்ள நபர்கள், நண்பர்கள் என் குடும்பத்தை காப்பாற்றுமாறும், மனவலியுடனும், மனவறுத்தத்துடனும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு செல்போன் எண்ணை குறிப்பிட்டு அதில் ரெக்கார்டு உள்ளதாகவும் அந்த கடிதத்தில்

தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.