திருச்சி காகித ஆலையில் 160 பாம்புகள் பிடிபட்டது!
திருச்சி மணப்பாறை மொண்டிப்பட்டி தமிழ்நாடு காகித ஆலையில் வளாகத்தை சுற்றி ஏராளமான விஷ பாம்புகள் இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து விஷப் பாம்புகளை உயிருடன் மீட்டு பாதுகாப்பாக வனப்பகுதியில் விட ஆலை நிர்வாகம் முடிவு செய்து சென்னை வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.
பின்னர் சென்னை வனத்துறை அலுவலகத்தின் அனுமதியின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாம்புகளை பிடிக்கும் இருளர்கள் 12 பேர் காகித ஆலை வளாகத்தில் இருந்த நல்ல பாம்பு, சாரை, கட்டுவிரியன் உட்பட 160 பாம்புகளை உயிருடன் பிடித்தனர் மேலும் காகித ஆலை வளாகத்தில் பிடிக்கப்பட்ட பாம்புகளை நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் மூலம் கொல்லிமலை வனப்பகுதியில் விட்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo