டயர் பஞ்சரானதால் விபத்து; கல்லூரி முதல்வர் பலி

0 633
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள மினிக்கியூர் பிரிவு அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கண்டெய்னர் லாரியை அதன் ஓட்டுனர் நிறுத்தி விட்டு சாப்பாடு வாங்கச் சென்றார். அப்போது சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் ஒன்று டயர் பஞ்சராகி இழுத்துச் சென்று கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதி உருக்குலைந்தது.

இந்த விபத்தில் காரில் சென்ற மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்(50) என்பவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனே வளநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பலியான பாலசுப்ரமணியன் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.