திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரியில் புதிய நீரேற்று பாசனத்திற்கு அனுமதி அளிக்க கூடாது, காவிரியில் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் திருச்சி சுப்ரமணிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பாக 50க்கும் அதிகமான விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருந்தாலும் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய….https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8