டிரைவர்-கிளீனரை மிரட்டி செல்போன்கள், ரூ.8 ஆயிரம் பணம் பறித்த 3 பேர் கைது

0 323
Stalin trichy visit

மணப்பாறை அருகே உள்ள குமாரவாடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(40) லாரி டிரைவரான இவர் கடந்த ஜூன் மாதம் திருச்சியில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு பீகாருக்கு சென்றுகொண்டிருந்தார். லாரி கிளீனராக அதே பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் என்பவரும் உடன் வந்தார்.

அப்போது சமயபுரம் கடை வீதியில் இரவு டிபன் சாப்பிடுவதற்காக லாரியை நிறுத்தியபோது மர்ம நபர்கள் சிலர் டிரைவர் மற்றும் கிளீனரை மிரட்டி 2 செல்போன்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அவர்கள் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் திருச்சி எஸ்.பி.மூர்த்தி உத்தரவின்படி, லால்குடி டிஎஸ்பி சீதாராமன் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் மண்ணச்சநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் மகன் பிரபாகரன் (20), அதே பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் மகன் அஜித்குமார் (20), தாளக்குடி கீழேதெருவைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் மகன் பிரகாஷ்ராஜ்(20) என்பதும், அவர்கள் 3 பேரும் லாரி டிரைவர் மற்றும் கிளீனரை மிரட்டி செல்போனை பறித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 செல்போன்கனை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.