திருச்சி மாவட்டம், மணப்பாறை ஜீவாதெருவைச் சேர்ந்தவர் கீதா(32). இவர் வீட்டில் மகள் இருந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் அலமாறியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த துணிகள் கலைந்திருந்ததை பார்த்துள்ளார்.
இதில் அங்கு வைக்கப்பட்டு இருந்த பர்சை எடுத்து பார்த்த போது அதில் இருந்த 5 பவுன் செயின் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.