மணப்பாறை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தை பிரிவுக்கு ரூ.42.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரங்கள் வழங்கிய ரோட்டரி சங்கம்

0 348
Stalin trichy visit

மணப்பாறை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தை பிரிவை மேம்படுத்த ரூ.42.50 லட்சம் மதிப்பில் அதிநவீன மருத்துவ உபகரங்கள் வழங்கிய ரோட்டரி சங்கம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள காமராஜர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகள் உள்ளது. இம்மருத்துவமனையில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்குள்ள மகப்பேறு சிகிச்சைப்பிரிவில் மாதந்தோறும் 400 க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவை பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட வகையில் மேம்படுத்துவதற்காக திருச்சி பெல்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 42.50 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கும் அகில உலகரோட்டரி அறக்கட்டளை மூலம் திருச்சிபெல் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பாக எக்ஸல் குரூப்ஸ் ஆப் கம்பெனிஸ் தலைவர் ஏ.கே.ஏஸ்.எம். முருகானந்தம் தலை மையில் நடைபெற்றது. மணப்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சிந்துஜா மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். விழாவில் பெல்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 42.50 லட்சம் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கியதற்கு மருத்துவமனை, மகப்பேறு சிகிச்சைக்கு வந்த பெண்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ரோட்டரி சங்கத்தின் பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.