திருச்சி அருகே மதுகுடித்து விட்டு குளித்தவர் ஆற்றில் மூழ்கி பலி!

0 440
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியாண்டி (45). இவர் நேற்று முன்தினம் மதியம், தனது நண்பர்களுடன் கல்லணை டாஸ்மாக் கடையில் மதுவாங்கி உள்ளார். பின் அவர்கள் கிளியூர் என்ற இடத்தில், கல்லணைக் கால்வாய் கரையில் உட்கார்ந்து மது குடித்துள்ளனர்.

 

பின் ஆற்றில் இறங்கி பழனியாண்டி நீச்சல் அடித்து விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். உடன் வந்த நண்பர்கள் ஆற்றில் தேடியபோது, கிளியூர் பாலம் அருகே பழனியாண்டி உடல் கரை ஒதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.