தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு!

0 306
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த குமாரவாடியைச் சேர்ந்தவர் கருத்தபிள்ளை (வயது 47). கூலி தொழிலாளியான இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 28ம் தேதி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு

 

சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருத்தபிள்ளை அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.