சத்திரம் பேருந்து நிலையம் வாகனம் நிறுத்துமிடத்தில் பகல் கொள்ளை

0 401
Stalin trichy visit

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தில் நடக்கும் பகல் கொள்ளை சற்றே ஸ்மார்ட்டாக உள்ளது…

இரவு 11 மணிக்கு ஒரு வண்டியை நிறுத்தினால் அப்பொழுதே ரூ.15.00 கொடுத்து ரசீது பெற்றுக்கொண்டு மறு நாள் இரவு 10 மணிக்கு வண்டியை எடுத்தால் மீண்டும் ரூ.15.00 தரவேண்டும் என்கிறார்கள்…

என்னைய இது கணக்கு என்றால்?…

இரவு 12 மணி வரை தான்… எத்தனை மணிக்கு விட்டாலும்… அடுத்த நாள் 12 மணிக்கு அடுத்த நாள் கணக்கு என்கிறார்கள்…

மற்ற ஸ்டாண்டை போல இல்லைங்க இங்கே என்றார்… அப்படின்னா வண்டிக்கு ஏசியெல்லாம் போடுவீங்களா என்றேன்….

நான் 07.05.2022 அன்று இரவு 10.00 மணிக்கு வண்டியை நிறுத்தினேன் ரூ.15.00 கொடுத்து இன்று 09.05.2022 அதிகாலை 5.30 மணிக்கு வண்டியை எடுக்கும் போது மீண்டும் 30.00 ரூபாய் கொடுக்கவேண்டும் என்றார்கள் ஏன் என்றால் இந்த கணக்கை சொல்கிறார்கள்….

ஸ்மார்ட் திட்டத்தில் உருவானதை ஸ்மார்ட்டாக கொள்ளையடிக்கிறார்கள்….

தினமும் பலர் சாபமே விடுவாங்க… உங்க கான்ட்ராக்டரை திருந்த, திருத்த சொல்லுங்க என்று நானும் சாபம் விட்டு வந்தேன் அந்த வாகன காப்பக காவலாளியிடம்….

Leave A Reply

Your email address will not be published.