குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை
திருச்சி சோமரசம்பேட்டை அடுத்த வியாழன் ஒரு பகுதியை சேர்ந்தவர் இளஞ்சியம் (30). இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.
இவரது கணவருக்கு குடி பழக்கம் இருப்பதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு கணவர் தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த இளஞ்சியம் பூச்சி மருந்தை குடித்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.