மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

0 428
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேப்பிலை மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக இன்று காலை பெண்கள் கோவில் முன்பு பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்திக் கொண்டும் அக்னி சட்டி எடுத்தும் பக்தி பரவசத்துடன் சென்றனர். வழிபாடு செய்தனர், இதே போல் கோழி, கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ராஜவீதிகளின் வழியாக செல்லும் வேடபரி விழா இன்று மாலை நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.