75வது சுதந்திர வருடத்தை கொண்டாடும் வகையில் மரக்கன்று நடும் விழா
பாரதிதாசன் பல்கலைக்கழக Rotract Club சார்பில், நாட்டின் 75வது சுதந்திர வருடத்தை கொண்டாடும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் டாக்டர் M.செல்வம் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மற்றும் ESRAG தெற்காசியா உறுப்பினர்Capt.E.அசோக் ராஜா பேசுகையில் நாம் உண்ணும் உணவிலும் தண்ணீரிலும் எண்ணற்ற மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளது என்று ஆய்வில் தெரிய உள்ளது. இது மட்டுமில்லாமல் நாம் சாப்பிடும் உப்பில் கூட ஒரு கிலோவுக்கு 600 மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளது , அது கேன்சர் போன்ற நோய்களை தீவிரப்படுத்த வகை செய்கிறது,
உலக நாடுகள் கழிவு மேலாண்மையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இதே சூழல் நீடித்தால் இன்னும் ஆறு தலைமுறைகள் இவ்வுலகம் வாழ தகுதியற்ற சூழலாக உருவாகும். தனிநபர் முயற்சியில் ஈடுபட்டால் கழிவு மேலாண்மையை சரி கட்டலாம் என்று கூறினார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கோன் ஊசி கொடுத்து “Plastic Maalai Challange” என்ற சவாலை தொடங்கி வைத்தார்.
ஒவ்வொருவரும் அவர் வீட்டில் பிளாஸ்டிக் பைகளை மற்ற கழிவுடன் சேர்த்து குப்பையில் போடுவதற்கு பதிலாக கோன் ஊசி நூலில் சேமித்து கழிவு எடுக்க வரும் சுகாதார பணியாளர்கள் இடம் கொடுத்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இன்னும் இரண்டு பேருக்கு இந்த சின்ன சவாலை செய்ய சொல்லுவது மூலம்,மிகப்பெரிய பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலில் தாக்கம் ஏற்படும்.
நாம் குப்பைத் தொட்டியில் குப்பை போட்டால் அடுத்த நொடியே கையை உள்ளே வைக்க சங்கடப்படும் நிலையில் ஒரு வாரம் கழித்து அந்த கழிவை தரம் பிரிக்கும் சுகாதார தொழிலாளர்களுக்கும் இச்செயல் ஆதரவாக இருக்கும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி தலைவர் Er.ராஜேந்திரன் , HOD Dr.செல்வம் , Rotract தலைவர் மாதேஷ் , செயலாளர் காயத்ரி மற்றும் ஏராளமான ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.