தீ விபத்து குறித்த சிறப்பு தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை
திருச்சி வாழவந்தான் கோட்டையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முனையத்தில் ஒரே சமயத்தில் தொழிற்சாலை வளாகத்தின் 2 இடங்களில் எண்ணெய் கசிவு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்படக்கூடிய தீ விபத்து குறித்த சிறப்பு தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன், இணை இயக்குனர் மாலதி, துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தீ தடுப்பு ஒத்திகை வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும். இப்பயிற்சியின் போது தீ தடுப்பு உபகரணங்ளின் செயல்பாடுகளும், அதனை கையாளும் ஊழியர்களின் அவசரகால நிலையின் போது செயல்படுவதற்கான ஆயத்த நிலையில் ஆய்வு செய்யப்படும். ஒத்திகையின் போது பாரத மிகு மின் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், எச்.ஏ.பி.பி. இந்தியன் ஆயில், சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை ஆகியவற்றிலிருந்து பரஸ்பர உதவி குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.