அங்கக சான்றளிப்பிற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 

0 385
Stalin trichy visit

நாம் நோயின்றி வாழ இயற்கை விவசாயத்துக்கு மாறுவது அவசியமாகும். பூச்சிகளில் இருந்து பயிர்களை பாதுகாத்து அங்கக முறையில் சாகுபடி செய்து லாபம் பெற முடியும். ஒரு ஏக்கருக்கு 5 மெட்ரிக் டன் நன்கு மக்கிய தொழு உரத்தினை இட்டு மக்க செய்வதால் மண்ணின் அங்ககத்தன்மை மேம்படும். அங்கக வேளாண்மை சான்று பெற 3 ஆண்டுகள் மாறுதல் காலம் கடைபிடிக்க வேண்டும். அங்கக விளைபொருள் உற்பத்தி மற்றும் விற்பனை, விதைபொருள் பதனிடுவோருக்கு அபீடா நிறுவன அங்கீகாரத்தின் அடிப்படையில் சான்று வழங்கப்படுகிறது. அங்கக சான்றளிப்பிற்கு விண்ணப்பபடிவம் 3 நகல்கள், உரிய ஆவணங்களுடன் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

பதிவு கட்டணம், ஆய்வு, சான்று கட்டணம், பயணநேர கட்டணம் வருடத்துக்கு சிறு, குறு விவசாயிகள் மொத்தம் ரூ.2,700-ம், பிற விவசாயிகள் ரூ.3,200-ம், குழு ஒன்றுக்கு பதிவு செய்ய ரூ.7,200-ம், வணிக நிறுவனங்களுக்கு ரூ.9,400-ம் கட்டணம் செலத்த வேண்டும். இது தொடர்பான தகவல்களுக்கு திருச்சி அங்ககச்சான்று ஆய்வாளர் சபாபதி (9940855058) என்ற எண்ணிலும், மன்னார்புரத்தில் உள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனரை 0431-2420133 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருச்சி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.