மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில்,பர்மா காலனி முத்து மாரியம்மன் கோயில் அருகாமையில் உள்ள கிரவுண்டை விளையாடுவதற்கு ஏதுவாக சுத்தம் செய்து தரும்படி சிறுவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் காவேரி நகர், குறிஞ்சி நகரில் மெயின் சாலையில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணியையும், ,பிளோமினால்புரத்தில் பாதாள சாக்கடை பணியையும், பிளோமினால் புரம் மூன்றாவது தெருவில் சாலைப் போடும் பணிக்கு ரோட்டில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த இடத்தினை அதிரடியாக மீட்டு சாலைப் போடும் பணியை ஆய்வு செய்தார்.