பெற்ற மகளிடமே பாலியல் துன்புறுத்தல் – திருச்சி குழந்தைகள் நல மருத்துவர் கைது!

0 1,208
Stalin trichy visit

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றிவருபவர் மருத்துவர் ரமேஷ், இவரது மனைவியும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மனைவி மருத்துவமனைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டிலிருந்த இவர்களது 13 வயதுடைய பெண்குழந்தையின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து டாக்டர்.ரமேஷின் மனைவி மகளை அம்மா வீட்டில் அழைத்துச் சென்று அங்கு மகளிடம் நிதானமாக விசாரித்தபோது…”குழந்தையின் அம்மா வேலைக்குச் சென்றபோது வீட்டிலிருந்த தனது பெண்குழந்தையிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து மருத்துவர் ரமேஷின் மனைவி சைல்டு லைன் அலுவலரிடம் தகவல் தெரிவித்தநிலையில், சைல்டு லைன் அதிகாரிகள் கன்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர், புகாரின் அடிப்படையில் தன்னுடைய மகளிடமே தவறாக நடந்துக்கொண்டது ஊர்ஜிதம் ஆனநிலையில் மருத்துவர்.ரமேஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.