திருச்சி – திண்டு க்கல், திண்டிவனம் – திருவண்ணாமலை, திருவள்ளூர் – சித்தூர் பகுதிகளில் இரவு நேரங்களில் காரை நிறுத்த வேண்டாம்: காவல்துறையினர் எச்சரிக்கை

0 393
Stalin trichy visit

திருச்சி – திண்டு க்கல், திண்டிவனம் – திருவண்ணாமலை, திருவள்ளூர் – சித்தூர் பகுதியில் இரவு நேரங்களில் காரில் செல்லும் போது கண்ணாடியில் முட்டை வீசினாலோ, தெரியாதவர்கள் காரை நிறுத்த முற்பட்டாலோ காரை நிறுத்த வேண்டா ம்,” என்று திருச்சி காவ ல்துறை சார்பில் அறிக்க ப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது:
இரவு நேரங்களில் நீங்கள் வாகனம் ஓட் டிச் செல்லும்போது, உங்கள் ஸ்கிரீன் கண்ணாடியில் முட்டைகள் வீசப்பட்டால், உடனே சரிபார்க்கும் எண்ண த்தில், காரை நிறுத்த வேண்டாம். கார் கண் ணாடியில் வைபரையும் இயக்க வேண்டாம். தண்ணீரையும் தெளிக்க வேண்டாம்.
ஏனென்றால், முட்டை தண்ணீரில் கல ந்து, பால் போன்று ஆகி விடும். அது உங்களை வெளியே பார்க்க முடி யாதவாறு பார்வையைத் தடுத்துவிடும். நீங்கள் சாலையின் ஓரத்தில் நின்று, இந்தக் குற்றவா ளிகளுக்கு பலியாகிவிட வேண்டாம். இது திருட் டுக் கும்பல்கள் பயன்படுத்தும் புதிய வழிப்பறி திட்ட முறையாகும்.
எனவே, தயவுசெய்து உங்கள் நண்பர்கள் மற் றும் உறவினர்களுக்கு இதை பகிர்ந்து தெரி விக்கவும். மிகமுக்கிய மாக இதை பகிர்ந்து கொள்ள மறுப்பதன் மூலம் சுயநலவாதியாக இருக்க வேண்டாம். புதிய ஊர்களில், ஆள் ‘நடமாட்டம் இல்லாத இடங்களில் அறியாத நபர்கள் கையை நீட்டி நிறுத்தினாலும், காரை நிறுத்துவது என்பது ஆபத்தானதாகும்.
இவ்வாறு திருச்சி காவல்துறை தெரிவித்து ள்ள து.

Leave A Reply

Your email address will not be published.