250க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன : அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி கலைஞர் நகர் பகுதியில் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு வட்டச் செயலாளர்கள் பன்னீர், ஜப்பர்அலி, சாமுவேல், சுப்ரமணி ஆகியோர் வரவேற்றனர். பகுதி செயலாளர் மணி தலைமை வகித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்மகேஸ் பொய்யாமொழி , முனைவர் கோவிசெழியன் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் தலைமை அரசு கொறடா ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது,
கழகத் தலைவர் தேர்தலின் போது கொடுத்த 505 வாக்குறுதிகளில் 250க்கும் மேற்பட்ட நிறைவேற்றப்பட்டுள்ளன. நாம் ஆட்சிக்கு வந்தபோது நிதி நிலைமை ஒன்றும் நம்மை ரத்தின கம்பளம் விட்டு வரவேற்கவில்லை அந்த சூழ்நிலையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றார்.
முன்னேற்றக்கழக ஆட்சியில்தான் திருச்சி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மருத்துவக்கல்லூரி உய்யக்கொண்டான் கால்வாய்கரை பலப்படுத்துதல் ஒருங்கிணைந்தநீதிமன்ற வளாகம் தாலுகா அலுவலகங்கள் வேளாண்மை கல்லூரி டைடல்பார்க் மற்றும் பல்வேறு கட்டமைப்புகளை தந்த ஆட்சி முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாக நான் சொன்னதை செய்து காட்டுவேன் என இன்றையதினம் சபதம் எடுத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்
மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் . சேகரன், என். கோவிந்தராஜன் , வண்ணைஅரங்கநாதன், .செந்தில், மண்டல குழு தலைவர்கள் .மதிவாணன்..,ஜெயநிர்மலா, இ. எம். தர்மராஜ், .நிலமேகம் , மருந்துக்கடை மோகன்,
டி. பி. எஸ். எஸ். ராஜ்முகமது, ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே எஸ் எம் கருணாநிதி மாரியப்பன், ராமசாமி, சபியுல்லா, செல்வராஜ், சின்னஅடைக்கன், பொதுக்குழு உறுப்பினர் குனாசேகரன்
மாவட்ட மகளிரணிஅமைப்பாளர் லீலாவேலு
பொதுக்கூட்டம் ஏற்பாடு திருச்சி தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் பகுதி திமுக
கூட்டத்திற்கு மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கிளை கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்