75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் சார்பாக உணவு பொட்டலங்கள்!
நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் சார்பாக 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ரெங்கா ரெங்கா கோபுர வாசலில் ஏழை எளியோருக்கு இனிப்புடன் கூடிய உணவு பொட்டலங்கள் மற்றும் சேலைகள் , வேஷ்டிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவி ஆணையர் கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன், புலவர் கிருஷ்ணா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.