மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

0 329
Stalin trichy visit

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (7.7.22) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம் பண்ணாங்கொம்புவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினைத் தொடங்கி வைத்தார்கள். பண்ணாங்கொம்பு விழா நிகழ்வில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி  பங்கேற்று இக்கல்லூரியில் குத்துவிளக்கினை ஏற்றிவைத்து மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், , சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ஏ. அங்கம்மாள், கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர்.கே.மேகலா ஒன்றியக் குழுத் தலைவர்கள் அமிர்தவள்ளி ராமசாமி, .எம். பழனியாண்டி , .ந.குணசீலன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.