மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது நீக்க அனுப்பி வைப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்பேரில் திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களிலுள்ள பழுதுகளை நீக்கும் பொருட்டு பெங்களுர் பாரத் மின்னணு இயந்திர தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள இயந்திர கிடங்கு திறக்கப்பட்டது. உடன் ஆட்சியர் அலுவக தேர்தல் தனி வட்டாட்சியர் முத்துசாமி உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.