அரசு துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று (27.8.22) திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம் , மகிழம்பாடியில் கனிமவள அறக்கட்டளை நிதியின் கீழ் ரூபாய் 30 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலையத்தினை மக்களின் மருத்துவ சேவை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சௌந்தரபாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவர்
தி. இரவிச்சந்திரன், முக்கியப் பிரமுகர் க. வைரமணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.