குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாநகரம், பாலக்கரை பொன்னையா மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு, மறுவாழ்வு மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சுந்தர்ராஜ் தலைமையில் 15.09.22 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா ஆகியோர் போதை பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு தலைப்பிலும்,குழந்தைகளுக்கான நான்கு வகையான உரிமைகள் வாழ்வதற்கான உரிமை, வளச்சிக்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமைகள் குறித்தும் குழந்தை பாதுகாப்பில் சமுதாயத்தின் பங்கு என்ற தலைப்பில் விழிப்புணர்வு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
