மாவட்ட தடகளப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு
திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள போட்டிகள் 2022 ஸ்டேட் பேங்க் (லேட்] S.மோகன் நினைவு சுழற்கோப்பை 2022
இணைந்து வழங்குபவர்கள் நியூரோ ஒன் & ஆப்பின் மில்லட் ரெஸ்டாரண்ட்
இளையோருக்கான திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் வரும் 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிகள் சிறப்புடன் நடைபெறுவதற்கும், அதிக அளவில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அதிக பதக்கங்களை பெற்று நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் மற்றும் நம் நாட்டிற்கும் பெருமை சேர்க்க தங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் அன்புடன் வேண்டுகிறோம்.
தடகள போட்டி கலந்துக் கொள்ள விரும்ப உள்ளவர்கள் பதிவு செய்ய
இன்று 16.09.22 கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு 8680808268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் D. ராஜு (9956473330) தெரிவித்துள்ளார்.