திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உணவு பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

0 278
Stalin trichy visit

திருச்சி தென்னூர் அண்ணநகரிலுள்ள திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கைம்பெண்கள் மற்றும் கணவனால கைவிடப்பட்டோர், டிராக்டர், வாகனம் வாங்குதல் என 15 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். மேலும் வாகனத்தின் மூலம் நடமாடும் கூட்டுறவு வங்கி சேவை செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.