திருச்சியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

0 280
Stalin trichy visit

திருச்சி, செப்.29 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. திருச்சி திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடன் உதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.