மயிலாடுதுறை விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

0 536
Stalin trichy visit

திருச்சி, செப். 29 மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வழியாக திண்டுக்கல் வரை (வண்டி எண்: 16847 -16848) செல்லும் விரைவு ரயில் அடுத்த மாதம் 24- ஆம் தேதி முதல் மயிலாடுதுறையில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தில் ரயில் இயக்க வேண்டும் என்று திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த அறிவிப்பால் ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி வண்டி எண் 16847 (விரைவு ரயில்) மயிலாடுதுறையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சை, பூதலூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பன் கோவில் சாண்டி, கடையநல்லூர், தென்காசி, வழியாக சென்று செங்கோட்டைக்கு இரவு 9.30 மணிக்கு சென்றைடையும். இதில் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் இந்த விரைவு ரயிலுடன் இணைந்து செல்லும். இதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண் 16848 செங்கோட்டையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மயிலாடுதுறையை வந்தடையும்.

Leave A Reply

Your email address will not be published.