திருச்சி மாமன்ற கூட்டத்திலிருந்து அதிமுக வெளி நடப்பு

0 293
Stalin trichy visit

சொத்து வரியை உயர்த்திய திமுக அரசு தற்போது மின் கட்டண உயர்வை உயர்த்தி அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து அதிமுக வெளி நடப்பு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள லூர்துசாமி அரங்கில் இன்று மாதாந்திர அவசர கூட்டம் அதனை தொடர்ந்து சாதாரண கூட்டம் நடைபெற்றது.

மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அரங்கத்திற்கு உள்ளே வந்த அதிமுகவினர் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்தபடி வந்திருந்தனர் – அதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி பொதுமக்களை சுமையில் தள்ளிய திமுக அரசு தற்போது மின் கட்டண உயர்வை கொண்டு வந்து பொதுமக்களுக்கு பன்மடங்கு சிரமத்தை கொடுத்து வருகிறது என்று முழக்கம் இட்டனர்.

மேலும் திருச்சி மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால் அதனை சீர்படுத்தாதவர்க்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் கூட்டத்தில் தங்களுக்கு பேச வாய்ப்பே வழங்குவதில்லை என்று அதிமுகவினர் வெளியே வந்து குற்றம் சாட்டினர்

Leave A Reply

Your email address will not be published.