ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
திருச்சி, அக்.1 புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே வீரப்பட்டியை சேர்ந்த விஜயகுமார்(27) நேற்று திருச்சி உத்தமர்கோவில் ரயில் நிலையத்தில் விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்சி ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.