மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும்: தண்ணீர் அமைப்பு வலியுறுத்தல்
புவிவெப்பத்தால் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களை நாம் சந்தித்து வருகிறோம்.
மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்தெடுக்க நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் , தனியார் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இவ்வாறு மரங்களை வெட்டுவது என்பது மனிதப் படுகொலைகளை விட வன்கொடுமையானது. கண்டிக்கத்தக்கது.
திருச்சி கே.கே நகர் செல்லும் வழி (காஜாமலை -RPF சாலை) சாலையோரம் உள்ள மரங்களின் கிளைகளை கழிக்காமல் இவ்வாறு வெட்டி வீழ்த்துவது சமூக நலனுக்கு எதிரானது.
இவற்றை மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கைப் பார்க்காமல், வெட்டப்படுவது நீடிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து மிச்சமுள்ள மரங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.
மரங்களைக் காப்போம் பசுமையான தூய்மையான திருச்சியை உருவாக்குவோம்
என்று தண்ணீர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.