தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை….
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி குரலிசைத்துறை சார்பில் இரு நாட்கள் அக்டோபர் 10, 11, தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை “தேசப்பக்திப் பாடல்களில் மெட்டமைத்தல் நடன வடிவமைத்தலின் இலக்கணங்கள்” என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இந்திய அரசின் இந்திய சமூக அறிவியல் ஆய்வு மைய கூட்டமைப்பின் நிதியுதவி பெற்று நடைபெறும் இரு நாட்கள் அக்டோபர் 10, 11 தேசிய பயிற்சிப் பட்டறையில் கர்னாடகா, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து இசையறிஞர்கள், நடனக் கலைஞர்கள் கலைத்துறை வல்லுநர்கள் பங்கேற்று பயிற்சி வழங்க உள்ளனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாவட்ட கலைப் பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் திரு.C. நீலமேகம் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். கல்லூரி மாணவர்கள், இசை, நடன ஆர்வலர்கள் பங்கேற்கிறார்கள்.. அதுசமயம் அனைவரும் பங்கேற்று தேசப் பக்திப் பாடல்களில் மெட்டமைத்தல் நடன வடிவம் உருவாக்கத்தில் உள்ள இலக்கணங்களை அறிந்து பயன்பெற வேண்டும்.