குருகுலம் சபா கல்சுரல் டிரஸ்ட் சார்பில் சலங்கை பூஜை விழா..
பழநி குருகுலம் சபா கல்சுரல் டிரஸ்ட் சார்பில் 24 ஆம் சலங்கை பூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் குருகுலம் அமைப்பின் நிறுவனர் குரு ஞானசக்திவேல், குரு ஞானசக்தி வேல் ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்டு பயிற்சி பெற்ற மாணவிகள் சலங்கை பூஜை விழாவில் நடனம் நிகழ்த்தினர். சிறப்பு அழைப்பாளராக கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ்குமார், மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர் திருமலைசாமி ஆகியோர் பங்கேற்றனர். பேராசிரியர் சதீஷ் குமார் தம் சிறப்புரையில் கலைகளால் மட்டுமே சமூகத்தை உயிர்ப்போடு இயங்க வைக்க முடியும். கலைகள்தான் காலந்தோறும் தமிழர்ப் பண்பாட்டை செழுமையுடன் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. ஆளுமைமிக்க மாணவர்களை உருவாக்கிட இளைய தலைமுறைக்கு பெற்றோர்கள் கலைகள் கற்றுத்தர முன்வரவேண்டும், ஆன்ட்ராய்டு யுகத்தில் இளைய சமூகம் தடம்மாறி போதையின் பக்கம் செல்லாமல் மடை மாற்றம் செய்து ஆக்கப்பூர்வமான மனிதனாக மாற்றுவது கலைகளே என்றார். நிகழ்வில் சலங்கை பூஜை முழுதும் தமிழிசை ப் பாடல்களால் நடனம் உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.