அஞ்சல்துறையின் திட்டங்களை விளக்கி துண்டுபிரசுரம் விநியோகம்

0 281
Stalin trichy visit

திருச்சி, அக். 10 உலக தபால் தின விழா அஞ்சல் துறையின் திட்டங்களை விளக்கி அஞ்சல் துறையினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
உலக தபால் தினம் விழா நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை அஞ்சலகம் தபால் ஊழியர் சரஸ்வதி நேற்றைய தினம் அவரது சேவை பகுதியான நவல்பட்டு, பர்மா காலனி, காவேரி நகர், அண்ணா கார்டன், அண்ணாமலை நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தபால் தினத்தை கொண்டாடும் வகையில் இனிப்பு வழங்கியதோடு, அவர்களிடம் அஞ்சல் துறையின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்குக்கு 4 சதவீத வட்டியும், தொடர் வைப்பு கணக்குக்கு 5.8 சதவீத வட்டியும்,மாதாந்திர வருமானம் திட்டத்திற்கு 6.6 சதவீதம் வட்டியும் ஒன்று, இரண்டு, மூன்று வருட வைப்பு தொகைக்கு 5.5 சதவீத வட்டியும்,ஐந்து வருட வைப்புத் தொகைக்கு 6.7 சதவீத வட்டியும், ஐந்து வருடம் முதியோர் சேமிப்பு திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டியும், 21 வருட செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 7.6 சதவீத வட்டியும், 15 வருட பொன்மகன் பொது வைப்பு நிதிக்கு 7.1சதவீத வட்டியும்124 மாத கிசான் விகாஸ் பத்திர திட்டம் 6.9 சதவீத வட்டியும், 5 வருட தேசிய சேமிப்புப் பத்திரத்திற்கு 6.8 சதவீத வட்டியும் வழங்கப்படுவதாகவும் இதனை பொதுமக்கள் நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.