அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பனை விதைகளை விதைத்த கல்லூரி மாணவிகள்
டாக்டர் APJ அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு தண்ணீர் அமைப்பும் அய்மான் மகளிர் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களும் இணைந்து மணிகண்டம் வட்டம் வண்ணாங்கோயில் ஏரிக்கரையில் 200 பனைவிதைகள் விதைத்தனர்.
நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் தலைமையில் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு.R.K.ராஜா முன்னிலையில் மணிகண்டம் வட்டம் வண்ணாங்கோயில் கிராம ஏரியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் நூறுநாள் வேலையாட்கள் மற்றும் அய்மான் மகளிர் கல்லூரியின் NSS நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 100 பேர் பனை விதைப்பில் பங்கேற்று ஏரிக்கரைகளில் மாநில மர விதைகளான பனை விதைகளை விதைத்தனர். அய்மான் மகளிர் கல்லூரியின்
NSS திட்ட அலுவலர் பேரா. ஹரிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மழைக்காலம் தொடங்கும்போதே ஏரிக்கரைகளில் பனைவிதைத்தல் நிலத்திற்கு வளம் சேர்க்கும். நிலத்தடி நீரை சேமிப்பதற்கும் கரைகளில் மண்ணரிப்பு ஏற்படாமல் தடுத்து வளப்படுத்தவும் புயல் இடி பேரிடர்களை எதிர்கொள்ளவும் பனை விதைகள் நீர்நிலைகளின் கரைகளில் அதிகமாக விதைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது