1333 கியூப்கள் மூலம் மகாத்மா காந்தி உருவப்படம் : பள்ளி மாணவர்கள் உலக சாதனை
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே என்.கருப்பம்பட்டி கிராமத்தில் காவேரி மானிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் 22 மாணவ, மாணவிகள் இணைந்து 1,333 கியூப்களை பயன்படுத்தி பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் பயிற்சியாளர் கிளிட்சன் பயிற்சிக்கு பின்னர் ஒரு மணி நேரம் 34 நிமிடங்களில் 8-க்கு 4 அளவில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை உருவாக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். க்யூப்புகள் வைத்து காந்தியின் படத்தை உருவாக்கிய மாணவ, மாணவிகள் ஜெட்லி புக் ஆப் ரெக்காட்சில் இடம் பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் பெற்றனர். புதிய உலக சாதனைக்கான சான்றிதழை பள்ளியின் தாளாளரும், சிவானி கல்வி குழுமத்தின் தலைவருமான டாக்டர் பி.செல்வராஜ் வழங்கினார். நிகழ்ச்சியை நேரில் ஆய்வு செய்ய கின்னஸ் உலக சாதனையாளர் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர் டிராகன் ஜெட்லி, நடுவர்கள் கின்னஸ் சாதனை படைத்த டாக்டர் ஜெகதீஸ், சோனி, குருபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கல்வி குழும செயலாளர் பிரபாகரன், ஓய்வு தலைமை ஆசிரியர் திருஞானம், நிர்வாகிகள் மாசிலாமணி, ராஜசேகரன், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாதனையை செய்த மாணவ மாணவிகளை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.