புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு

0 377
Stalin trichy visit

கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக புளியஞ்சோலை அருகே ஐயாற்றில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது…

திருச்சி துறையூர் அடுத்த புளியஞ்சோலை சுற்றுலா பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் ஐயாறு பாய்கிறது – இந்நிலையில் தொடர்ந்து எட்டாவது நாளாக கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது, இதன் காரணமாக அய்யாற்றில் ஏற்கனவே வெள்ளம் பெருக்கெடுத்து வந்த நிலையில் தற்போது வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து வருகிறது.

பாதுகாப்பு கருதி புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து ஏழாவது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் – கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கொல்லிமலை அடிவாரப் பகுதியில் உள்ள  வைரசெட்டிபாளையம்,
எரகுடி,துறையூர் பெரிய ஏரி,திருத்தலூர் ஏரி  சுமார் பத்துக்கும் அதிகமான ஏரிகள் கலங்கு தாண்டி நிரம்பி வழிந்து ருகிறது.

Leave A Reply

Your email address will not be published.