முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 1.90 லட்சம் கனஅடியாக உயர்வு
திருச்சி, அக்.17 மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு தொடர்ந்து வந்து கொண்டுள்ள நிலையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கிய நாள் முதலே இந்த ஆண்டு கேரளா கர்நாடகா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெளுத்து வாங்கியது – இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர்ந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வெள்ளப்பெருக்கை சந்தித்து வருகின்றன.இன்று காலை நிலவரப்படி திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 1.90 லட்சம் கன அடியாக நீர் வரத்து இருந்து வருகிறது – இதில் காவிரி ஆற்றில் 68 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 1.28 ஆயிரம்கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. அதிகபடியான வெள்ள நீர் கொள்ளிடம் ஆற்றில் செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டு இருந்தார் – மேலும் மாவட்டத்தில் 59 இடங்கள் பிளாக்ஸ்பாட் என கண்டறியப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.