அம்ரிதா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி
திருச்சி, அக். 19 அம்ரிதா பள்ளியில் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்தாட்டப் போட்டி இன்று நடைபெற்றது. போட்டியை ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை மாலதி தொடங்கி வைத்தார். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியைகள் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். இதில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் பி.வி.எம் பள்ளி, எஸ்.பி.ஐ.ஒ.ஏ பள்ளி, அம்ரிதா வித்யாலாயா, செவந்த் டே பள்ளியும், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் ஆர்.எஸ்.கே பள்ளி, கே.வி. பள்ளி, ஜி பள்ளி, அமிர்தா பள்ளி மாணவ, மாணவிகள் பரிசுகள் பெற்றனர்.
