குடிபோதையால் விபரீதம் : ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் காயம்
திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளை கேட்டு வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து
திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஜேம்ஸ் அகாடமி ஆகிய பள்ளி மாணவ மாணவிகளை வழக்கமாக இரு ஆட்டோக்களிள் ஏற்றி வருவது வழக்கம்
ஆனால் இன்று ஒரு ஆட்டோ வரவில்லை என்பதால் இரண்டு பள்ளி மாணவர்களையும் ஒரே வாகனத்தில் ஏற்றி வந்துள்ளனர் என கூறப்படுகிறது
திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள சிக்னலை தாண்டி வில்லியம் சாலையில் செல்ல முற்பட்டபோது
சிக்னல் நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்த நிலையில் மாற்று பாதையில் செல்ல ஆட்டோ இயக்கிய போது ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது
இதனை தொடர்ந்து அருகில் ஸ்டிக்கர் கடைகளில் நின்ற ஊழியர்கள்
குழந்தைகளை மீட்டனர் இந்த ஆட்டோவில் LKG முதல் 6 மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் பயணித்துள்ளனர்
இதில் ஸ்ரீ ஹரி, தட்ச்சேயினி, ஆகிய இரண்டு குழந்தைகளையும் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையிலும் கீர்த்தனா என்கின்ற மாணவியை குழந்தைகள் இயேசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ட்ரோல்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக வாகனங்கள் கடக்கும் சாலையாகவும் போக்குவரத்து காவல்துறையினர் காவல் நிலையம் அருகில் இருக்கக்கூடிய பகுதியான ஒத்தக்கடை சிக்னலில் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்பாகி உள்ள நிலையில்
தற்போது ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் குடிபோதையில் ஆட்டோ இயக்கி விபத்து ஏற்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .